உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

திண்டிவனம் : மரக்காணம் மேற்கு, கிழக்கு, ஒலக்கூர் கிழக்கு மற்றும் திண்டிவனம் நகர அ.தி.மு.க.,வின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.திண்டிவனத்தில் நடந்த கூட்டத்திற்கு, நகர அவைத் தவைர் மணிமாறன் தலைமை தாங்கினார். செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம், திண்டிவனம் எம்.எல்.ஏ., ஆகியோர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் சமயத்தில் பணியாற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன்.ஜெ.,பேரவை நிர்வாகிகள் குமார், ரூபன்ராஜ், வடபழனி, கார்த்திக், முன்னாள் நகர செயலாளர் கணேசன், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மருத்துவர் அணி கோகுலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், சரவணன், திருமகள், ஐ.டி.பிரிவு எழில்ராஜ், காமேஷ், சவுகத்அலி.முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் சக்கரவர்த்தி, எம்.ஜி.ஆர்.மன்றம் ரவி, பன்னீர், எம்.ஜி.ஆர்.இளைஞரணி உதயகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், விஜயகுமார், செந்தில், அய்யப்பன், ஜாகீர்உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ