மேலும் செய்திகள்
குட்கா வைத்திருந்தவர் கைது
08-Sep-2024
மயிலம் : கூட்டேரிப்பட்டில் அ.தி.மு.க., கொடி கம்பம் அமைக்க போலீசார் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று இரவு அ.தி.மு.க., கொடி கம்பம் நடுவதற்கு கட்சியினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர்.தகவலறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொடிக்கம்பம் அமைக்க ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டி காட்டினர்.கூட்டம் நடக்கும் தினத்தன்று மட்டும் கொடி கட்டி விட்டு அவிழ்த்து விட வேண்டும் என போலீசார் எச்சரித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
08-Sep-2024