உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை

விழுப்புரம்: சூரிய ஒளி மின்சாரத்தை விவசாயிகள் தங்களின் மின் மோட்டார்களுக்கு பயன்படுத்திட வேண்டும் என மின் மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:மின்சார தேவை காலை, மாலை, இரவு நேரங்களில் அதிகமாக உள்ளது. இதனால், பகல் நேரங்களில் அதிகமாக சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியாவதால், மின்நுகர்வை சமச்சீராக்கும் நோக்கில் விவசாயிகள் தங்கள் மின் மோட்டார்களை சூரியஒளி மின்சாரத்தை பகல் நேரங்களில் பயன்படுத்தலாம்.இந்த சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதால் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு மற்ற வளங்களைக் கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாடு அளவை குறைக்கலாம்.நமது நாட்டை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில், பகலில் அதிகளவு தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும், இயன்றவரை தங்களின் விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகபடுத்திட வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை