உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 22 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை வடகால் கிராம மக்கள் மகிழ்ச்சி

22 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை வடகால் கிராம மக்கள் மகிழ்ச்சி

செஞ்சி : வடகால் கிராமத்திற்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.செஞ்சி ஒன்றியத்தில் மலையும், ஏரியும் சூழ்ந்த கிராமம் வடகால். செஞ்சியில் இருந்து சோமசமுத்திரம் வழியாக செல்லும் வழியில் வனத்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதனால் இந்த வழியில் சாலை வசதி இல்லை. சின்ன பொன்னம்பூண்டி வழியாக செல்லும் சாலை 2003ஆம் ஆண்டு போடப்பட்டது.இந்த சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு பல முறை பள்ளி வேன்கள் இதில் சிக்கி கொண்டன. 108 ஆம்புலன்ஸ் கூட இங்கு வர முடியாத நிலை இருந்தது. இதனால், கடந்த 5 ஆண்டாக வடகால் கிராம மக்கள் சாலை மறியல், நாற்று நடும் போராட்டம் என பல போராட்டங்களை நடத்தினர்.மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று ரூ. 82 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, பொருளாளர் இக்பால், நிர்வாகிகள் ஹரி, பாண்டியன், பாஷா, பழனி, கார்த்திகேயன், ராமதாஸ், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி