உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் விவசாய கண்காட்சி

விழுப்புரத்தில் விவசாய கண்காட்சி

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த விவசாய கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.விழுப்புரம் ஆனந்தா மஹாலில் விவசாய கண்காட்சி நடந்தது. விழுப்புரம் மாவட்ட உர விற்பனை வியாபாரிகள் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார்.பார்த்திபன், ராஜா முன்னிலை வகித்தனர். விவசாயம் தொடர்பான உரங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த கண்காட்சியில், ஸ்பிக் உர நிறுவனத்தில் இருந்து மண்டல மேலாளர், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சி ஏற்பாடுகளை ஸ்பிக் உர நிறுவனம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை