உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விதைகளை பரிசோதனை செய்து தரம் அறிந்து விதைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் ஆலோசனை

விதைகளை பரிசோதனை செய்து தரம் அறிந்து விதைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் ஆலோசனை

விழுப்புரம், : வேளாண் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருளாக உள்ளதால், விவசாயிகள் இந்த விதையை பரிசோதனை செய்து தரம் அறிந்து விதைக்க வேண்டும்.திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் செய்திக்குறிப்பு:வேளாண் உற்பத்திக்கு விதை அடிப்படை இடுபொருள். விதையின் தரத்தை அறிய விதை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனையில், முளைப்பு திறன், புறத்துாய்மை, ஈரப்பதம், பிறரக கலப்பு கண்டறிந்து முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை மட்டுமின்றி உழவர்களிடம் இருந்தும், விற்பனையாளர்களிடம் இருந்தும், விதை உற்பத்தியாளர்களிடம் இருந்தும் பெறப்படும் விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்படுகிறது.விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை விதைக்கும் முன், தரமறிய ஒரு மாதிரிக்கு 80 ரூபாய் கட்டணம் செலுத்தி, தரம் அறிந்து விதைக்க வேண்டும்.மேலும், இது பற்றி விபரங்கள் பெற, மூத்த வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலக முதல் தளம், விழுப்புரம் என்ற முகவரியை அனுகலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை