உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் மாணவிகள் செயல் விளக்க நிகழ்ச்சி

வேளாண் மாணவிகள் செயல் விளக்க நிகழ்ச்சி

வானுார் : வானுார் கிராமத்தில், காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ பயிற்சி திட்டதின் கீழ் செயல்முறை விளக்க நிழ்ச்சி நடந்தது.காரைக்கால் பஜன்கோ வேளாண் கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவிகள், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் வானுார் கிராமத்தில், தாழ் கூரை அமைத்தல், குழி தட்டு நாற்றங்கால், வாழையில் மேக்ரோப்ரோபகேஷன் மற்றும் பக்க கன்று சிகிச்சை குறித்து செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கினர். இந்நிகழ்வு டி.பி.டி., ஸ்டார் கல்லுாரி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் முனைவர் புஷ்பராஜ், முனைவர்கள் பார்த்தசாரதி, சங்கர், மணிகண்டன், மாரிச்சாமி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ