மேலும் செய்திகள்
வரும் 20ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
16-Dec-2025
விழுப்புரம்: அனைத்து விவசாயிகளும் நாளை 20ம் தேதிக்குள் நில உடைமை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு; வேளாண் - உழவர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய, மாநில அரசுத் திட்டங்களை பெறுவதற்கு, நில உடைமை பதிவு எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் நில உடைமை பதிவு செய்யாவிட்டால் அடுத்த கிசான் தவணை பெற இயலாது. விழுப்புரம் மாவட்டத்தில் 68,843 விவசாயிகள் நில உடைமை பதிவு செய்யாமல் உள்ளனர். நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது வேளாண் அலுவலர்களை அணுகி நில பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு நில ஆவணங்களான பட்டா, சிட்டா, ஆதார் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். மேலும் இன்று 19ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில உடைமை பதிவு செய்து தர சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்யாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் நாளை 20ம் தேதிக்குள் நில உடைமை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
16-Dec-2025