உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பின் சம்பா பட்டத்திற்கு விதை நெல் இருப்பு உள்ளது வேளாண் அலுவலர் தகவல்

பின் சம்பா பட்டத்திற்கு விதை நெல் இருப்பு உள்ளது வேளாண் அலுவலர் தகவல்

வானுார்: வானுார் தாலுகாவில் பின் சம்பா பட்டத்திற்கு ஏற்ப நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வானுார் வேளாண் இயக்குனர் எத்திராஜ் செய்திக்குறிப்பு:வானுார் தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்திற்கு நெல் சாகுபடி இலக்காக 5,500 எக்டர் பரப்பளவில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 24 ஆயிரத்து 340 டன் அரிசி உற்பத்தி செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 915 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பின் சம்பா பட்டத்திற்கு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு உகந்த நெல் ரகமான ஆடுதுறை 39, ஆடுதுறை 37 விதைகள் போதிய அளவு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.எனவே விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ