உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

திண்டிவனம்; திண்டிவனத்திலுள்ள மூன்று வார்டுகளில் அ.தி.மு.க.,பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டிவனம் காவேரிப்பாக்கம் 20 வார்டு பூத் கமிட்டி கூட்டத்திற்கு நகர அ.தி.மு.க.,செயலாளர் தீனதயாளன் தலைமை தாங்கினார். இதில் திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன், மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர் குமார், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆலோசனை வழங்கி, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான உத்தரவை வழங்கினர். இதில் நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் அன்பழகன், ராஜா, பிரகாஷ், ஒலக்கூர்ஒன்றிய நிர்வாகிகள் பன்னீர், தயாளன்,யோகானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நகராட்சி 15 வார்டு பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் நகர செயலாளர் வெங்கடசன் தலைமையில் நடந்தது. திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு உத்தரவு வழங்கினார். இதில் மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், வார்டு நிர்வாகிகள் ஸ்ரீதர், முரளி, நாகவேல், சிவராமன், ரவிச்சந்திரன், பொன்னரசு, அரிகிருஷ்ணன், ஜெய்லிங்கேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 17வது வார்டு கூட்டத்திற்கு நகர மகளிர் அணி செயலாளர் ஜெயஸ்ரீ தலைமைதாங்கினார். திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு நியமன உத்தரவை வழங்கி பேசினார். இதில் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஜெ.,பேரவை மாநில துணை செயலாளர் பாலசுந்தரம், முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை