உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விபத்தில் படுகாயமடைந்த அ.தி.மு.க., பிரமுகர் சாவு

விபத்தில் படுகாயமடைந்த அ.தி.மு.க., பிரமுகர் சாவு

வானுார்: கிளியனுாரில் பைக்கில் இருந்து தவறி விழுந்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அ.தி.மு.க., பிரமுகர் இறந்தார்.கிளியனுார் அடுத்த உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர். இவரது மகன் பெருமாள், 35; அ.தி.மு.க., பிரமுகர். இவர், கடந்த 29ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, 55; என்பவருடன், பைக்கில் கிளியனுார் சென்று வீடு திரும்பினர். பெருமாள் பைக்கைஓட்டினார்.கிளியனுார் மெயின் ரோட்டில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது கட்டுப்பாட்டைஇழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பெருமாள், அண்ணாதுரை இருவரும் காயமடைந்தனர். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பெருமாள், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை