உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் படிவம் வழங்கல்: அ.தி.மு.க.,வினர் ஆய்வு

வாக்காளர் படிவம் வழங்கல்: அ.தி.மு.க.,வினர் ஆய்வு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த படிவம் வழங்கும் பணியை அ.தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், வாக்காளர் சிறப்பு திருத்த படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. நேமூர், ஈச்சக்குப்பம், எண்ணாயிரம், எசலாம் ஆகிய கிராமங்களில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு திருத்த படிவம் வழங்கும் பணிகளை விக்கிரவாண்டி அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், வடக்கு ஒன்றிய பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஜெ., பேரவை மாவட்ட துணைச் செயலாளர் பெரியான், ஒன்றிய செயலாளர் சரவணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி