உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கன்யா ரமேஷ் தங்க மாளிகையில் அட்சய திருதியை விற்பனை ஜோர்

கன்யா ரமேஷ் தங்க மாளிகையில் அட்சய திருதியை விற்பனை ஜோர்

விழுப்புரம்: விழுப்புரம் கன்யா ரமேஷ் தங்க மாளிகையில், அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகில் உள்ள நேருஜி சாலை, கன்யா ரமேஷ் தங்க மாளிகையில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு விற்பனை நேற்று நடந்தது. அட்சய திருதியை முன்னிட்டு, சவரனுக்கு 1,200 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டது. வெள்ளி நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை. தங்க நகைகளுக்கு செய்கூலி வசூலிக்கப்படவில்லை. மிக குறைந்த சேதாரம் வழங்கப்பட்டது. அட்சய திருதியை சிறப்பு விற்பனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்க, வாடிக்கையாளர்கள் குவிந்தனர். உரிமையாளர்கள் ரமேஷ்குமார், தைரியா கெலோட் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் நகைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ