உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

 அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் நேற்று 27, இன்று 28ம் தேதியும், வரும் 3, மற்றும் 4ம் தேதியும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க உள்ளனர். இது குறித்து செஞ்சி தொகுதியை சேர்ந்த அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். தாசில்தார் துரைசெல்வம் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், தி.மு.க., பொது குழு உறுப்பினர் மணிவண்ணன், காங்., நகர தலைவர் சூரியமூர்த்தி, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் அருள்முருகன், பா.ஜ., தொகுதி துணை அமைப்பாளர் அன்பழகன், தேர்தல் தனி தாசில்தார் உமா மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் செல்வம் பங்கேற்றனர். கூட்டத்தில், எஸ்.ஐ.ஆர்., திருத்தம் மூலம் நீக்கப்பட்டு, இறுதி பட்டியலில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் இடம் பெற்றுள்ளனர். தற்போது நடைபெறும் சிறப்பு முகாமில் பெயர் விடுபட்டவர்கள், முகவரி மாறி உள்ளவர்கள், 2026 ஜனவரி 1ம் தேதி 18 வயதை நிறைவு செய்பவர்கள் அதற்கான படிவங்களை கொடுத்து பெயர் சேர்க்கை மற்றும் திருத்தங்களை செய்யலாம் என தாசில்தார் அறிவுறுத் தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி