அன்னதானம்
திண்டிவனம்: வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.திண்டிவனம் எம்.ஆர்.எஸ்., ரயில்வே கேட் அருகே உள்ள சன்மார்க்க சத்திய தர்ம சாலையில் வள்ளலாரின் 201வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. நண்பர்கள் லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், நண்பர்கள் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன் ரமேஷ், காமராஜ், சைமன் துரைசிங், சதாசிவம், நிர்வாகிகள் சக்திவேல், சரவணன், செந்தில்குமார், பால விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.