மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
02-Sep-2024
திண்டிவனம்: விளக்கிலிருந்த தீ பற்றியதால் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன் மனைவி கங்கா, 41; இவரது தாயார் கஸ்துாரி, 62; இவருக்கு பார்வை குறைபாடு உள்ளது.கடந்த 20ம் தேதி காலை 10:30 மணியளவில் வீட்டு வாசற்படியில் ஏற்றி வைத்திருந்த விளக்கின் அருகே கஸ்துாரி நின்றபோது நைட்டியில் தீ பிடித்து படுகாயம் அடைந்தாா்.சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று அதிகாலை இறந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Sep-2024