உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்புமணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்

அன்புமணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர். பா.ம.க., நிறுவனத்தலைவர் ராமதாசிற்கும், தற்போதைய தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இருவரும் தங்களுக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளனர். இதில் அன்புமணி ஆதரவுடன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளராக புதியதாக நியமிக்கப்பட்ட சங்கர் ஏற்பாட்டில், திண்டிவனம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம், மரக்காணம் சாலை தனியார் திருமண நிலையத்தில் நேற்று காலை நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சேது தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். இளைஞரணி ராஜேஷ், வன்னியர் சங்கம் முருகன், முன்னாள் நகர செயலாளர் சண்முகம், ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெயராமன், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பாலாஜி, மாநில துணை தலைவர் தருமன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்; அன்புமணி நடைப்பயணத்தில் கலந்து கொள்ளுதல்; திண்டிவனம் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்தல்; நகராட்சி புதிய பஸ்நிலையத்திற்கு ஓ.பி.ஆர். அல்லது திருக்குறள் முனுசாமி பெயரை வைத்தல்; என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பிரச்னை ஏற்படாமல் இருக்க, இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை