உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுதா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் மலர்விழி, பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சரளா, துணைச் செயலாளர் தீபா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். அங்கன்வாடி ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.போராட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலி இடங்களில், உதவியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும். பணியாளர்களுக்கு புதிய மொபைல்போன்களை வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு ஒப்புதல் அளித்தபடி ஒரு மாத கால கோடை விடுமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை