உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

செஞ்சி : செஞ்சி, பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் நேற்று ஆனி திருமஞ்சனம் நடந்தது.இதையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் செய்தனர்.தொடர்ந்து 8:00 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாசக பாடல்களை பாடியபடி, கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சாமி கோவில் உலா நடந்தது. திருமறைகழக நிர்வாகிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ