அனிச்சம்பாளையம் கிராம மக்கள் மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் கிராம மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் பகுதியில் தொடர் கனமழை பெய்ததால், அனிச்சம்பாளையம் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர் ஒரு வாரமாக வடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று மதியம் 12:30 மணியளவில் விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம், மழை வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மதியம் 1:10 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.