மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்; கட்சியினர் மரியாதை
16-Sep-2025
விக்கிரவாண்டி; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முண்டியம்பாக்கத்தில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுத ம சிகாமணி தலைமை தாங்கி அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து கட்சி கொடியேற்றி 'தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன்' உறுதிமொழியை கட்சியினர் ஏற்றனர். மாவட்ட சேர்மன் ஜெயச் சந்திரன், தொகுதி பார்வையாளர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயபா ல், மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், சுதாகர், விஜயவேலன், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி,சாவித்திரி, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
16-Sep-2025