தமிழக முதல்வருக்கு மணநாள் வாழ்த்து
விழுப்புரம்: சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து லட்சுமணன் எம்.எல்.ஏ., மணநாள் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண நாளையொட்டி, நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தி.மு.க., நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோரை நேரில் சந்தித்து திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.