உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு பயிரிட மானியம் அறிவிப்பு

கரும்பு பயிரிட மானியம் அறிவிப்பு

விழுப்புரம் : செங்கல்ராயன் கூட்டுறவு ஆலை விவசாயிகளுக்கு, 2025-26ம் ஆண்டுக்கான கரும்பு பயிருக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு: பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில், 3,543 கரும்பு விவசாயிகளிடமிருந்து, 2,28,050 மெ.டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு, அரவை செய்யப்பட்டது. ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வீதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து, வேளாண் துறை அரசாணைப்படி 7 கோடியே 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கரும்பு சப்ளை செய்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-26ம் ஆண்டில் புதிதாக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு, அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அகல பாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 7,450 ரூபாய் மானியமாகவும் மற்றும் அகல பாருடன் கூடிய ஒரு பரு விதை கரணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 3,200 ரூபாயும் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதனுடன், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ், விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்று, பரு சீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதை கரணை நடவு இனங்களுக்கு மானியம் வழங்க உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி