மேலும் செய்திகள்
மக்களை கவர்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
11-Sep-2024
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
09-Sep-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில், மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் அசாருதீன் தலைமை தாங்கினார். த.மு.மு.க., மாவட்ட செயலர் ஜாமியாலம் ராவுத்தர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, செயலாளர் பஜூலுதீன், பொருளாளர் ரியாசுதீன், இளைஞரணி மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க., மாநிலச் செயலாளர் முஸ்தாக்தீன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.த.மு.மு.க., மாநில செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், முகமது ஜக்கிரியா மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.புதிய பஸ் நிலையம் வரை சென்ற ஊர்வலத்தில், போதைப் பொருட்கள் மற்றும் மது ஒழிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பிச் சென்றனர்.
11-Sep-2024
09-Sep-2024