உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை எதிர்ப்பு பிரசாரம்

புகையிலை எதிர்ப்பு பிரசாரம்

செஞ்சி: அனந்தபுரம் கடை வீதியில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் உலக புகையிலை தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ரோட்டரி சமுதாய குழும தலைவர் அஜிஸ் தலைமை தாங்கினார். புகையினால் வரும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்குவதை ரோட்டரி சமுதாயக் குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி சமுதாய நிர்வாகிகள் சங்கர், ராஜேந்திரன், வெங்கடாஜலபதி, சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ