மேலும் செய்திகள்
பத்ம விருதுக்கு கருத்துரு கலெக்டர் அறிவிப்பு
13-May-2025
விழுப்புரம் : நாட்டின் உயரிய பத்ம விருதுகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள்-2026க்கான பரிந்துரைகள், கடந்த மார்ச் 15ம் தேதி முதல் துவங்கியுள்ளது. வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வரை பத்ம விருதுக்கு பரிந்துரைக்கலாம். பரிந்துரைகள் ராஷ்ட்ரிய புரஸ்கார் போர்ட்டலில் https://awards.gov.inஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.பத்ம விருதுகளான, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றாகும்.1954ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.இந்த விருது, சிறப்பு பணிகளை அங்கீகரிக்கும் மற்றும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறந்த மற்றும் சாதனைகள் மற்றும் சேவைக்காக வழங்கப்படுகிறது.இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடு இல்லாத அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்பட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.எனவே, இவ்விருதுக்கு தகுதியானவர்கள் https://awards.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
13-May-2025