மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்..
03-Jun-2025
விழுப்புரம்; சித்தானங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் புஷ்பவேணி பத்ராச்சலம் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சாமுண்டிவள்ளி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் சின்னப்பராஜ் வரவேற்றார்.விழாவில், கடந்த கல்வியாண்டில் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் வெற்றி பெற்ற 8ம் வகுப்பு மாணவர் ரோகன் மற்றும் ஹரிணி ஆகியோருக்கு தலா 1000 ரூபாயை நாவப்பன் வழங்கினார். தொடர்ந்து, அரசின் விலையில்லா பாடப்புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பள்ளி சீருடைகளை பத்ராச்சலம் வழங்கினார்.ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, அலங்காரம், செந்தில், சீதா, சரவணன் உட்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆசிரியை வித்யாலட்சுமி நன்றி கூறினார்.
03-Jun-2025