உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு பாராட்டு விழா

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மயிலம் : மயிலம் அடுத்த தழுதாளி அரசு மேல்நிலைப் பள்ளிப் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மயிலம் அடுத்த தழுதாளி அரசு மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் சார்பில் திருவக்கரை கிராமத்தில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவில் வளாகங்கள், சாலைகளை துாய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பச்சை தண்ணீர் தலைமை தாங்கினார் துணை தலைமை ஆசிரியர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். விழாவில் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. முதுகலை வணிகவியல் ஆசிரியர் முத்து விஜயரங்கம் உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ