விழுப்புரம் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
விழுப்புரம், : விழுப்புரத்தில் தொடர் திருட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.விழுப்புரம் தாலுகா பகுதிகளில், கடந்த மாதம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் லியோசார்லஸ், ஏட்டுகள் மகாராஜா, பாலமுருகன், போலீசார் சத்தியன், நீலமேகம் ஆகியோரை எஸ்.பி., சரவணன் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.