உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தொழிற் பழகுநர் பயிற்சி இன்று சேர்க்கை முகாம்

தொழிற் பழகுநர் பயிற்சி இன்று சேர்க்கை முகாம்

விழுப்புரம், : தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ், தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் இன்று முதல் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகம் போன்ற அரசு பொதுத் துறை நிறுவனங்கள், டி.வி.எஸ்., சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 1,000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.நேரடியாக தொழிற் சாலைகளில் அப்ரண்டிசாக சேர்ந்து, 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை 8,500 முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.கூடுதல் விபரத்திற்கு, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம். 04146- 224989, 96296 66279 என்ற போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை