உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 30 ஆண்டுகளாக கல்விச் சேவையில் அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி

30 ஆண்டுகளாக கல்விச் சேவையில் அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி

வி ழுப்புரம் அடுத்த அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி உலகத் தரமான கல்விச் சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 1994ம் ஆண்டு எஸ்.பி.எஸ்., கல்வி அறக்கட்டளை மூலம் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி துவங்கப்பட்டது. விழுப்புரம், கடலுார் மாவட்டத்தில் 30 ஆண்டுகளைக் கடந்த முதல் பொறியியல் கல்லுாரியாக அரசூர் கல்லுாரி உள்ளது. கல்லுாரி தலைவர் சரவணன், செயலாளர் ராமநாதன் ஆகியோரின் கீழ் சீரிய முறையில் இயங்கி வருகிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலை அருகே, விழுப்புரத்தில் இருந்து 17 கி.மீ., தொலைவில் கல்லுாரி அமைந்துள்ளது. கல்லுாரியில் 6 இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளும், ஒரு முதுநிலை பொறியியல் பட்ட மேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆய்வக வசதிகளையும், சுத்தமான சுற்றுப்புற சூழலை அங்கீகரிக்கும் வகையில் இந்த கல்லுாரிக்கு தரச்சான்றிதழ் கடந்த 2008ம் ஆண்டு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கல்லுாரியின் பாராட்டத்தக்க வளர்ச்சியால் கடந்த 2013ம் ஆண்டில் நடந்த மறு ஆய்விலும் மறு உயர்தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டது. இங்கு, சிறந்த பொறியியல் வல்லுநர்கள் மூலம் தேசிய கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகள், அரசு சார்ந்த நிறுவனங்களின் நிதியுதவியோடு அனைத்து துறைகள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கல்லுாரியில் 'நான் முதல்வன்' என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு சம்பந்தமான கூடுதல் திறன் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. இந்த கல்லுாரி மாணவர்கள் வெளிநாடுகளில் பல தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர். இங்கு மாணவர்கள் முதலாம் ஆண்டு பயிலும் போதே வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 1,759 மாணவ, மாணவியர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், இந்த கல்லுாரியில் அதிவேக இணையதள வசதி, நுாலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வசதிகளோடு உள் விளையாட்டு அரங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னை பல்கலைக்கழக தேர்வு தர பட்டியலில் கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த கல்லுாரி மாணவ, மாணவியர் உயரிய இடத்தை பிடித்து வருகின்றனர். அரசு அளிக்கும் சலுகைகள் குறைவின்றி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !