மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
விழுப்புரம் ; விழுப்புரத்தில் கலைஞர் நுாலகத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், நேற்று காலை நடைபெற்ற விழாவிற்கு, தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் லட்சுமணன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி வரவேற்றார்.துணை முதல்வர் உதயநிதி, கலைஞர் நுாலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், தயா இளந்திரையன், கற்பகம், மகளிரணி தேன்மொழி, சேர்மன்கள் தமிழ்செல்வி பிரபு, கலைச்செல்வி, சச்சிதானந்தம், தனலட்சுமி உமேஷ்வரன், சங்கீதஅரசி ரவிதுரை, சேர்மன் அப்துல் சலாம், முன்னாள் சேர்மன் ராஜா, துணை சேர்மன்கள் சித்திக் அலி, உமா மகேஸ்வரி, மணிவண்ணன், ஜீவிதா ரவி, வீரராகவன், உதயகுமார், பாலாஜி, விழுப்புரம் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர், துணை முதல்வருக்கு சால்வை அளித்தனர்.நிகழ்ச்சியில், நகர செயலாளர்கள் சக்கரை, நைனா முகமது, விக்கிரவாண்டி நகர துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், தமிழ்செல்வி கேசவன், வனிதா அரிராமன், மீனா வெங்கடேசன், அன்புமணி, கவுதம், விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள் இளவரசி ஜெயபால், செல்வம், அயலக அணி அமானுல்லா, முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், கவுன்சிலர் நவநீதம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவமுருகன், வார்டு பிரதிநிதி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
09-Oct-2024