உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மெக்கானிக் மீது தாக்குதல்

மெக்கானிக் மீது தாக்குதல்

விழுப்புரம்,: சம்பள பணம் கேட்ட ஏ.சி., மெக்கானிக்கை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த எல்.ஆர்., பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தன், 37; இவரும், வளவனுாரை சேர்ந்த வேல்முருகன் என்பவரும், ஒன்றாக ஏ.சி., மெக்கானிக் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், விவேகானந்தன் வேலை செய்த சம்பள 8000 ரூபாயை வேல்முருகன் கொடுக்க வேண்டும். இந்த பணத்தை கடந்த 9ம் தேதி கேட்டபோது, விவேகானந்தனை, வேல்முருகன திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தார்.புகாரின்பேரில் வேல்முருகன் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை