உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையை சீரமைக்கக்கோரி சாலை மறியல் செய்ய முயற்சி; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

சாலையை சீரமைக்கக்கோரி சாலை மறியல் செய்ய முயற்சி; விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

விக்கிரவாண்டி ; விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனுாரில் சாலையை சீரமைக்கக் கோரி மகளிர் குழுவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.காணை அடுத்த கஞ்சனுார் கே.ஆர்.பாளையம் பகுதி யில் சேதமான பிள்ளையார் கோவில் தெருவை சீரமைக்கக் கோரி மகளிர் குழு தலைவிகள் சித்ரா, நாகம்மாள் தலைமையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட நேற்று காலை 10:00 மணியளவில் முயன்றனர்.தகவல் அறிந்த காணை ஒன்றிய பி.டி.ஓ., சிவக்குமார், ஒன்றிய பொறியாளர் ஜெயலட்சுமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், அபிராமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், இன்னும் இரு தினங்களில் சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் முடிவை கைவிட்டு 10:40 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ