உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர்கள் பட்டியலில் கவனம் தி.மு.க., மாவட்ட செயலாளர் அறிவுரை

வாக்காளர்கள் பட்டியலில் கவனம் தி.மு.க., மாவட்ட செயலாளர் அறிவுரை

விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில், தி.மு.க.,வினர் கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 15, 17 தேதிகள் மற்றும் 23, 24 தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில், விழுப்புரம் (தெற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், பாக முகவர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும்.தங்கள் பகுதி ஓட்டுப்பதிவு மையத்தில், வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி அன்று 18 வயது நிறைவடைபவர்களை, புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அந்தந்த ஓட்டுப் பதிவு மையத்திற்குட்பட்ட தகுதியற்ற வாக்காளர்களை நீக்குதல், தகுதியான வாக்காளர்களை சேர்த்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை