உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில்கள் கடத்தல்; ஆட்டோ டிரைவர் கைது

மதுபாட்டில்கள் கடத்தல்; ஆட்டோ டிரைவர் கைது

விழுப்புரம்; ஆட்டோவில் நுாதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், அண்ணா நகர் அருகே மேற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த சபாபதி, 31; என்பவர், தனது ஆட்டோவில் டிரைவர் சீட்டை பெட்டியாக மாற்றி, 400 புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சபாபதியை போலீசார் கைது செய்து, ஆட்டோ மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், அண்ணா நகரை சேர்ந்த சங்கர் என்பவருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை