மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி : மதுரை
15-Aug-2025
விழுப்புரம், ; விழுப்புரத்தில் வீட்டின் மேற்கூரையில் சோலார் பொருத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பு: மத்திய அரசின் வீட்டின் மேற்கூரையில் சோலார் பொருத்துவதற்கான பிரதம மந்திரியின் சூரியகார் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தேவைப்படுவோருக்கு பதிவு செய்யும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில் வரும் 18ம் தேதி காலை 10:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. முகாமில், தலைமைப் பொறியாளர் சதாசிவம், மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். திட்டம் பற்றி தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் சிவக்குமார் விளக்குகிறார். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள், மின்வாரிய அதிகாரிகள், கடன் ஆலோசனை பற்றி கூற வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
15-Aug-2025