உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

மயிலம்: மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி துவக்கி வைத்து, குழந்தை திருமணம் தடைச் சட்டம் மற்றும் விழிப்புணர்வு தொலைபேசி எண்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அலுவலக வளாகத்தில் தொலைபேசி எண்ணுடன் கூடிய பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.மயிலம் பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், மணிமாறன், துணைச் சேர்மன் புனித ராமஜெயம் உரையாற்றினர். மயிலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வகுமார், கிஷோர், கண்ணன், சுந்தரி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !