மேலும் செய்திகள்
அரசு கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
05-Sep-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்கள் விவரிக்கும் பதாகை திறப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர்கள் பாபு, சுவாமிநாதன், மணவாளன் முன்னிலை வகித்தனர். இதில், தமிழக அரசின் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்த பதாகை திறந்து விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, பேராசிரியர்கள் சின்னதுரை, சுமதி, ரங்கநாதன் அலுவலக கண்காணிப்பாளர் ரம்யா மற்றும் ராசு, ரேவதி, விஜயலட்சுமி, கிரிஷ்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Sep-2025