உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரயர் ராமசாமி வரவேற்றார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு இன்ஸ்பெக்டர் தவமணி, போலீசார் கொளஞ்சி, யுவராஜன், சரவணன், மாணவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு கருத்துகளை தெரிவித்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏழுமலை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை