உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.காந்தி அரசு மேல்நிலை பள்ளியில் சைபர் கிரைம் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.விழுப்புரம் ஒரத்தூர் ஓ.பி.ஆர்., கலைக் கல்லுாரியில் அனைத்து மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்சோ குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை