உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 3 ஆண்டுகள் பதுங்கிய வங்கதேச பெண் சிக்கினார்

3 ஆண்டுகள் பதுங்கிய வங்கதேச பெண் சிக்கினார்

விழுப்புரம்:மேல்மலையனுார் அருகே, அரசு அனுமதியின்றி வசித்த வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், சங்கிலிக்குப்பம் கிராமத்தில் வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர், அனுமதியின்றி வசிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேல்மலையனுார் சிறப்பு எஸ்.ஐ., ஜெயக்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சையத் காதர் என்பவர் மனைவி ெஷலினாபீ, 38, என்பவரை விசாரித்தனர். அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் அனுமதியின்றி மூன்று ஆண்டுகளாக கள்ளத்தனமாக அங்கு வசிப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
ஆக 27, 2025 06:37

பிச்சை போடுபவர்கள் எங்கிருந்து வந்து பிச்சை போட்டால் என்ன என்று தமிழக விடியல் பிச்சை காரன் நினைத்து விட்டதால் இப்போ தீவிரவாதிகளின் சொர்க்க பூமி ஆகி விட்டது ...


நிக்கோல்தாம்சன்
ஆக 27, 2025 06:17

இது போன்ற வந்தேறிகளுக்கு இடம் கொடுக்கும் தமிழகத்து பக்கிகள் தான் புகலிடம் கொடுக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை