உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செல்லபிராட்டி கிராமத்தில் வங்கி கடன் வழங்கும் விழா

செல்லபிராட்டி கிராமத்தில் வங்கி கடன் வழங்கும் விழா

செஞ்சி :வல்லம் அடுத்த செல்லபிராட்டி கிராமத்தில் நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. ஸ்டேட் பாங்க் சார்பில் நடந்த விழாவிற்கு செஞ்சி கிளை முதன்மை மேலாளர் விஜயகுமார் வரவேற்றார். சேலம் நிர்வாக அலுவலக முதன்மை மேலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். மண்டல முதன்மை மேலாளர் சங்கர்அதி, நிதி சேர்க்கை மேலாளர் வடிவேல் ஆகியோர் வங்கியின் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். ஊராட்சி தலைவர் அன்பரசி கன்னியப்பன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், செயலிழந்த வங்கி கணக்குகளை புதுப்பிப்பதன் அவசியம், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு 1 கோடியே 57 லட்ச ரூபாய் தொழில் கடன் வழங்கப்பட்டது. வங்கி பணியாளர்கள், கிராம மக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி