உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிமென்ட் சாலை பணிக்கு பூமி பூஜை

சிமென்ட் சாலை பணிக்கு பூமி பூஜை

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் சிமென்ட் சாலை பணிக்கான பூமி பூஜை நடந்தது. தாண்டேஸ்வரன்கோவில் பகுதியிலிருந்து கொடுக்கன்குப்பம் கிராமம் வரை 89.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி பணியை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை