உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி: மூதாட்டி பலி

பைக் மோதி: மூதாட்டி பலி

திருவெண்ணெய்நல்லூர்: சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி இறந்தார். திருவெண்ணெய் நல்லூர் அடுத்த பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 75 வயது மூதாட்டி ஒருவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி சென்ற பல்சர் பைக் மூதாட்டி மீது மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !