உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் திருடிய நபர் கைது 18 வாகனங்கள் பறிமுதல் 

பைக் திருடிய நபர் கைது 18 வாகனங்கள் பறிமுதல் 

செஞ்சி:செஞ்சி போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்து, 18 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேல்களவாய் கூட்ரோட்டில் செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப் இன்ஸ்பெக்டர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஷாஜகான், 55; என்பதும், இவர், செஞ்சி, வளத்தி, அனந்தபுரம், வந்தவாசி பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்மீது வழக்குப் பதிந்து 18 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை