உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., எம்.பி., மீது பா.ஜ., போலீசில் புகார்

தி.மு.க., எம்.பி., மீது பா.ஜ., போலீசில் புகார்

திண்டிவனம்: தி.மு.க., எம்.பி., மீது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் பா.ஜ.,வினர் புகார் அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து, தி.மு.க., எம்.பி., ராஜா சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவதூறாக பேசியது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் பல இடங்களில் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் பா.ஜ.,வினர் புகார் அளித்தனர். இதில் நகர பா.ஜ.,தலைவர் வெங்கடேசபெருமாள், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் எத்திராஜ், வழக்கறிஞர் செந்தில், முன்னாள் மாவட்ட பொருளாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ