உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் விழா பா.ஜ., மாநில தலைவர் பங்கேற்பு

முன்னாள் அமைச்சர் பிறந்த நாள் விழா பா.ஜ., மாநில தலைவர் பங்கேற்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கில், அவரது 107 வது பிறந்த நாள் விழா நடந்தது.தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நகேந்திரன், கோவிந்தசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில துணைத் தலைவர் சம்பத், மாநில செயலாளர் வினோஜ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.பின்னர், நயினார் நாகேந்திரன் கூறியதாவது;மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர். காங்., ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் துணிச்சலுடன் பங்கேற்றவர். மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். பல தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். தனது இறுதி மூச்சு வரை நேர்மையாக வாழ்ந்த மாபெரும் தலைவர் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ