உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுாரில் பா.ம.க., தலைவர் பிறந்த நாளில் ரத்த தான முகாம்

வானுாரில் பா.ம.க., தலைவர் பிறந்த நாளில் ரத்த தான முகாம்

வானூர்: வானூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க., மற்றும் கிழக்கு மாவட்ட வன்னியர் சங்கத்தின் சார்பில், பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள டி.பி.ஆர்., திருமண நிலையத்தில் ரத்த தான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை தாங்கி துவக்கி வைத்து, ரத்ததானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகு (எ) ராகவேந்திரன், கிழக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தனர்.இதில், கிளியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் ரத்ததான வங்கி மருத்துவர்கள் சுப்புலட்சுமி, விஜயா மற்றும் மருத்துவக்குழுவினர், ரத்தம் சேகரித்தனர்.நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாவாடை ராயன், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மத்திய ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மணவெளி கோபால், சவுந்தர், மணிவண்ணன், ஒன்றிய தலைவர்கள் சாந்தகுமார், விஜயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், நிர்வாகிகள் ராஜேந்திரன், பிரகாஷ், விமல், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி