உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

மயிலம் : மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் ரத்ததான முகாம் நடந்தது.மயிலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார். முகாமில், திரளான இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து ரத்ததானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் தனலட்சுமி சுகாதார ஆய்வாளர்கள் பாலகுமாரன், மோகனகிருஷ்ணன், கிராம சுகாதார செவிலியர் சுபா, பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி